இந்தியாவின் தலைநகரான டெல்லியின் ஐந்தர் மந்தரிலிருந்து தமிழக விவசாயிகளின் குரல்கள் மார்ச் 14 ஆம் தேதியிலிருந்தே கோபமாக எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. இந்தியா முழுமைக்கும் அக்குரல்கள் எதிரொலித்தாலும் கூட அவர்களுக்கு உரிய பதிலைச் சொல்ல வேண்டிய மத்திய அரசும் கைகட்டி நின்றன. வாய்மூடி வேடிக்கை பார்த்தன. அது இன்று வரை வேறு, வேறு வகைகளில் தொடரத்தான் செய்கின்றது.

அடிப்படைகாரணங்கள்:

ஆனால் எத்தனை காலந்தான் நியாயத்தின் குரல் நீதி சீற்றத்துக்கு கேட்காமல் இருக்கும்? விவசாயிகளின் அறசீற்றத்திற்கான காரணத்தை உயர்ந்து கொண்டே தேசிய மனித உரிமை ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசிடம் விவசாயிகள் மரணத்திற்கான விளக்கத்தை அவர்களிடமும் கேட்டது. அதன் பின்னர் தான் தனது மௌன உறக்கத்தை கலைத்துக் கொண்ட தமிழக அரசு பெயருக்கு விவசாயிகளுக்கு நிவாரணத்தை அறிவித்தது. அந்த நிவாரணமும் பெயரளவிற்குதான் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசு விவசாயிகள் மரணத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

‘சொந்தப் பிரச்சனை காரணமாகவே சில விவசாயிகள் இறந்தார்கள்’ என்று கூட ஒரு அமைச்சர் கு றி ப் பி ட் ட து ம் உ ண் டு. வான்பொய்த்து, மண் பொய்த்து,சாகுபடி செத்ததைப் பார்த்து மனம் செத்து உடல் மடங்கி விழ உயிர் துறந்த விவசாயியின் மரணத்தை இப்படியாக பலர் கொச்சையாகவே விமர்சனம் செய்த அவலமும் உண்டு. தமிழகத்தில் இருந்து கொண்டு பேசினால் வேலைக்கு ஆகாது என்று தான் மனம் குமுறிய விவசாயிகள் தேசிய தென்னிந்திய ந தி க ள் இணைப் பு ச ங் க ஒ ரு ங் கி ¬ ண ப் ப £ ள ர் அய்யாகண்μவி! தலைமையில் டெல்லிக்குச் சென்றுவிட்டார்கள். போதாத நிவாரணத்தைக் கொடுத்துவிட்டு போராடாதே எனத் த டு க் க நினைக் கு ம் ஆளுங்கட்சிகளின் முகமூடிகள் டில்லியில் கிழி பட்டுக்கொண்டிருக்கின்றன. உள்ளூரில் எடுபடாது கிடந்த தமிழக விவசாயிகளின் நியாயக்குரலின் உண்மை ஒளி எல்லா மாநில விவசாயிகளையும் அங்கே அழைத்துக் கொண்டிருக்கிறது.

அணிவகுக்கும் கோரிக்கைகள்:

தமிழக விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகள் இவைதான். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சரியான நிவாரணத்தொகையை ª ப ற் று த் த ர « வ ண் டு ம் , தற்கொலைகளை தடுக்க வேண்டும், வங்கிகளில் வாங்கிய கடனைத்தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற அறச்சீற்றக்குரல்கள் அவர்களால் டெல்லியில் எழுப்பப்பட்டு வருகின்றன. போராட்டத்தின் தொடக்கத்தில் ஐந்தர் மந்தரிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பிரதமர் அலுவலக நுழைவாயிலில் படுத்துக் கொண்டனர் விவசாயிகள். இதை சற்றும் எதிர்பாராத டெல்லி காவல் துறை நாளை காலை போராட ஏற்பாடு செய்து தருகிறோம் என நிரம்பக்கெஞ்சி, கொஞ்சம் மிரட்டி விவசாயிகளை வேனில் ஏற்றி மீண்டும் ஐந்தர் மந்தர் பகுதிக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டுவிட்டது.

போக்குவரத்து செலவுக்கு கடன் வாங்கிக் கொண்டு டெல்லி வந்து சேர்ந்த விவசாயிகள் எங்கே தங்குகிறார்கள்? உணவுக்கு என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? வந்த மூன்று நாட்கள் இலவசமாக உணவு கிடைக்கும் சீக்கியர்களின் குருத்துவாராவுக்கு (கோவில்) சென்று கிடைக்கும் சப்பாத்தி, ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டார்கள். டெல்லியின் கடுங்குளிரையும் தாங்கிக் கொண்டு ஐந்தர்மந்தரின் சாலைப் பகுதியிலேயே படுத்து உறங்குகிறார்கள். ஆதிவாசி தோற்றத்தில் போராட்டம், தூக்குபோடும் போராட்டம் சவமாக படுத்துப்போராட்டம், மண்டையோடு மாலையணிந்து போராட்டம், மொட்டை அடித்தல் என தினமும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை அரசின் கவனத்தை ஈர்க்கும் என நம்பி தினம் ஒரு போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தினம் ஒரு போராட்டம் நடத்துவதெல்லாம் சரி! சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்கள் நம் விவசாயிகள் என்றா கேட்கிறீர்கள்! தங்கமான மனிதர் சார் நீங்கள். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இல்லாத அந்த மனிதாபிமானம் டில்லியில் வசிக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இருக்கிறது சார். தமிழக விவசாயிகளுக்கான மூன்று கால உணவுத் தேவைகள் அனைத்தையும் அவர்கள்தான் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். உலகுக்கே சோறு போட விவசாயி செய்த தர்மத்துக்கு ஒரு வாய் சோறு கிடைக்காமல் போய்விடுமா சார்?

வருகிறார்கள் பல மாநில விவசாயிகள்:

அதனால்தான் தமிழக விவசாயிகள் டெல்லியின் மையம் பகுதியில் தினமும் மனத்துணிவோடு குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் நியாயமான குரலின் உண்மை பல மாநில விவசாயிகளின் மனதையும் தொட்டுவிட்டது. அதனால் தான் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜம்முகாஷ்மீர், ஆந்திரா, அரியானா போன்ற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி ஐந்தர் மந்தரை நோக்கி வந்து தமிழக விவசாயிகளுடன் சேர்ந்து அமர்ந்து வருகிறார்கள். முதலில் தில்லிக்கு வந்த தமிழக விவசாயிகள் 84 பேர்தான். பிறகு சிலர் வர 140 என்றானது. தில்லியின் கடுங்குளிர், தொடக்க காலம் கிடைத்த உணவு ஒத்துவராத சூழலில் டயாரியா எனப்படும் ஒயாத வயிற்றுப்போக்கு காய்ச்சல் என்ற நிலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இக்கட்டுரை எழுதப்படும் நாளில் எல்லா மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தில்லியில் திரண்டு உள்ளார்கள் என்கிறது தொலைக்காட்சித் தகவல்.

நடந்தவை இவை:

இதெல்லாம் இருக்கட்டும். இந்த தமிழக விவசாயிகளை டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் வாதிகள் எத்தனை பேர் போய் பார்த்தார்கள் தெரியுமா? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அவர்களை வேளாண் அமைச்சரிடமும் அழைத்துக் கொண்டு போனார். பார்க்கலாம் என்றார் வேளாண் அமைச்சர். அவ்வளவுதான். வேறு ஒன்றும் மு ன் « ன ற் ற மி ல் ¬ ல எ ன் கி ற £ ர் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்μ. தமிழகத்தைச் சேர்நத நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ச ந் தி த் தி ரு க் கி ற £ ர் . நி தி ம ந் தி ரி அருண்ஜெட்லியை சந்திக்க வைத்திருக்கிறார். அவரிடமும் அதே பதில்தான் என்கிறார் அய்யாக்கண்μ. இவர்களைத்தவிர திமுகவின் நாடாளுமன்ற எம்.பி.க்கான திருச்சி சிவா, கனிமொழி, கம்ப்யூனிஸ்ட் கட்சி ராஜா, தமிழக நடிகர்களான விஷால், பிரகாஷ் ராஜ் போன்றோரும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

பற்றாக்குறை நிவாரணம்:

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது 39,565 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசு 1,764 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது. ஏறத்தாழ தமிழகத்தில் 400 விவசாயிகள் மாரடைப்பு, தற்கொலை என விவசாய பாதிப்பால் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்கிறார்கள் விவசாயிகள். அதை இல்லை என மறுக்கிறது தமிழக அரசு. எங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து உரிய நிவாரணம் கிடைக்காததால் டெல்லிக்கு வந்து சேர்ந்தோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம். விவசாயிகள் இரு மடங்கு லாபம் பெற வழிகாட்டுவேன். நதி நீர் இணைப்புக்கு தீர்வு காண்பேன் என்று பிரதமர் மோடி தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறார் அய்யாக்கண்ணு.

நதிகள் இணைப்பு சாத்தியமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது அவர் அளித்த பதில் இது. முன்பு மத்தியில் அமைச்சராக இருந்த உமாபாரதி கங்கை பிரம்மபுத்திரா நதி இணைப்பு, கோதாவரி, மகாநதி, பாலாறு போன்ற நதிகளை இணைப்பது சாத்தியம் என்று ஒரு ஆய்வறிக்கை தயாரித்துள்ளார். அதை ஆய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். நதி நீர் இணைப்புக்கான திட்டச்செலவு மதிப்பீடு ரூ.10லட்சம் கோடி என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த தொகைக்கு எங்கே போவது என்று கேட்பீர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை வாராக்கடன் என்று வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளன. அது சாத்தியமாகிறது. இது சாத்தியமாகாதா என எதிர்கேள்வி வைத்துள்ளார். என்ன செய்கிறது அரசுகள்? தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளரான அய்யாகண்ணு.

வைக்கும் கேள்விகள் சிந்தனைக்குரியதாக இருப்பதை பல மாநில விவசாயிகளும் ஏற்றுள்ளனர். அதனால் தான் டில்லியை நோக்கி அவர்கள் வந்து சேருகின்றனர். தமிழக அரசு தங்கள் விவசாயிகள் போராடுவதை இதுவரை குறிப்பிட்டு தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. அப்படி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விட்டால் அதை மத்திய அரசு எதிர்ப்புக் குரலாக எடுத்துக் கொண்டு விடுமென தமிழக அரசு தயங்கிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இல்லை விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு என மார்ச் 28 ஆம் தேதி குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல் எடப்பாடி பழநிச்சாமி.

கணக்குப்போடுங்கள்:

ஒரு ஒப்பீட்டுக் கணக்கில் பார்த்தால் கடந்த 40 ஆண்டுகளில் வங்கி மேலாளரின் சம்பளம் 440 மடங்கு உயர்ந்துள்ளது. ஆசிரியருக்கான சம்பளம் 400 மடங்கு, எம்எல்ஏவின் சம்பளம் 220 மடங்கு, தங்கத்தின் விலை 200 மடங்கு என உயர்ந்துள்ளது. ஆனால் நெல்லின் விலையோ 22 மடங்குதான் உயர்ந்துள்ளது. இதிலிருந்தே இந்திய விவசாயியை அரசு 2ஆம் தாக்குடி மகனாகவே நினைக்கிறது எனத் தெரியவில்லையா? குறிப்பாக தமிழக விவசாயத்தின் மேல் தான் எத்தனை தாக்குதல்கள். மீத்தேன், இயற்கை எரிவாயு, வறட்சி, காவிரி நீர் பொய்த்தது என்ற ஒரு பிரச்சினையிலும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து கொள்வதே இல்லை என தனது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைக்கிறார் அய்யாக்கண்μ உண்மையும் அதுவாகத்தானே உள்ளது. தனி விமானம் பிடித்து ஈஷா யோக மையம் வரும் பிரதமருக்கு டெல்லியில் இருந்து வாரக்கணக்கில் போராடும் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என்பது அதற்கு ஒரு உதாரணந்தானே! தமிழக விவசாயிகளை மத்திய அரசு பல விதங்களிலும் புறக்கணிக்கிறது என்பதற்கு மீண்டும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் போன்றவை நிரூபிக்கின்றன. சிந்திக்கலாமா? இராணுவம் மட்டுமா ஒரு நாட்டின் வலிமை? உ ண வு உ ற் ப த் தி யி ன் தன்னிறைவுதானே ஒரு நாட்டின் வலிமை. அதைத்தரும் விவசாயிகளை ஒரு நாடு இப்படி ஒதுக்கி விட முடியுமா? உணவு உற்பத்தியை கவனிக்காமல் வல்லரசு என்பது சாத்தியமாகி விடுமா?

ஜல்லிக்கட்டு அனுமதியைப் பெற வார விடுமுறை நாள், ஒரே இரவில் நான்கு அமைச்சரவைகள் டெல்லியில் இயங்கி அதைச் செயல்படுத்தின. அத்தகைய ஒரு முயற்சியை ஏன் இப்போது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை? ஆண்டுதோறும் தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதிதான் வறட்சியில் பாதிக்கப்படும். ஆனால் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் முழுப்பரப்புமே வறட்சியை சந்தித்த ஆண்டாக 2016 அமைந்து விட்டது. மழையும் ஏமாற்றியது. கர்நாடகமும் ஏமாற்றி வருகிறது.

மாற்றாந்தாய் மனநிலை:

தங்கள் மாநில வறட்சி நிவாரணமாக கர்நாடகம், ஆந்திரம் பிரதேசம் கேட்ட மொத்த தொகையில், 30 முதல் 35 சதவீத தொகையை வழங்கிய மத்திய அரசு தமிழகம் கேட்ட தொகையில் 5 முதல் 10 சதவீதத்துக்குள் வழங்கியதை மாற்றாந்தாய் மனப்பான்மை என்று தானே குறிப்பிட முடியும். ஏறத்தாழ ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு, விவசாயம் முழுமையான நட்டம் அடைந்தது தெரிந்தும் தமிழக அரசு 5 ஆயிரம் மட்டுமே இழப்பீடு கொடுப்பது நியாயமான ஒன்றா? ஒரு கணக்கு போடுங்கள்! தமிழக விவசாயிகள் போராட்டம் என்ன ஆகும்? உண்மைகள் உரக்கப்பேசட்டும். வெல்லட்டும்.

தஞ்சை.என்.ஜே.கந்தமாறன்