ரமோன் மேக்சேசே விருது அமெரிக்காவின் ராக்பெல்லர்ஸ் அறக்கட்டளையின் ஆசியாவிற்கான விருதாகும். இந்த விருதை, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபல ரமோன் மேக்சேசேயின் நினைவாக வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கான ஒத்துழைப்பை பிலிப்பைன்ஸ் அரசு நல்கி வருகிறது. ஏசியாவின் மக்களுக்கு பல்வேறு வழியில் தொண்டு செய்பவர்களுக்கான விருதாகவே இது 1957ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஒரு சர்டிபிகேட், அதிபர் ரமோன் மேக்ஸேஸே படம் போட்ட ஒரு மெடல், மற்றும் ரொக்கப் பரிசு சுமார் 20 லட்சம் தரப்படும். மேலும் இந்த ராக்பெல்லர் அறக்கட்டளையின் தொடர் உதவியும், பல சமயங்களில் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. போர்ட் பவுண்டேஷன்இந்த ரமோன் மேக்சேசே விருது வகைகளில் ஆசியாவின் ‘‘வளர்ந்து வரும் தலைவர்கள்’’ அதாவது ” Emergent Leadership” என்ற ஒரு புதிய வகையை போர்ட் அறக்கட்டளை துவக்கியுள்ளது 2000ம் ஆண்டில். இதற்கான பரிசு தொகை மற்றும் ஏற்பாடுகளை ஃபோர்ட் அறக்கட்டளையே மேற்கொண்டுள்ளது. இதில் இளைய தலைமுறையினருக்கான, அதாவது 40 வயதிற்குள்ளானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.உங்களுக்கு ஓ.கேஉங்களுக்கு ஏதோ ஒரு விருது கிடைத் துள்ளது. அது யார் கொடுத்தால் என்ன?! மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நிச்சயம் லாபம் இல்லை. ஆனால் அந்த விருதை பெற மேடையேறி போகும்போது, அறிவிக்கப்படும். ‘சைடேஷன்’ எனப்படும் விருதுக்கான முகவுரை தான், கோவப்படுத்துகிறது.CITATION“He saw that his was a caste-dominated art that fostered an unjust, hierarchic order by effectively excluding the lower classes from sharing in a vital part of India’s cultural legacy. He questioned the politics of art; widened his knowledge about the arts of the Dalits (“untouchables”) and non-Brahmin communities; and declared he would no longer sing in ticketed events at a famous, annual music festival in Chennai to protest the lack of inclusiveness…An ancient vocal and instrumental musical system, Carnatic music started centuries ago in temples and courts but was subsequently “classicised” to become the almost exclusive cultural preserve of the Brahmin caste— performed, organised, and enjoyed by the elite who have access to it.”இப்படியான முகவுரையை நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றால், விருதே கிடைக்காதோ!!! பாவம்! என்ன செய்வது!எடுத்து வளர்த்த கலைதேவியின் முகத்தில் எச்சில் துப்பிவிட்டு, மேடையேறி செல்ல துணிந்து விட்டீர்கள்!! ஆழ்வார்களும், நாயன்மார்களும் வலம் வரும் நமது நாட்டில், ஏதோ முதன் முதலாவதாக, ஒரு குடிசை பகுதியில் சென்று இவர் பாடினாராம். இதுவரை பிராமணர் அல்லாதவர்களுக்கு மறுக்கப் பட்ட, கர்நாடக இசையை இவர் பொது ஜனங்களுக்கு எடுத்து சென்றாராம்!! ஒன்று கேட்க வேண்டும் இந்த பிராமணரை!! இவர் தினம் தினம் கூறும் காயத்ரி மந்திரத்தை கொடுத்த விஸ்வாமித்திரர் பிராமணரா!! ஏன் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இயற்றிய வால்மீகியும், வசிஷ்டரும் பிராமணரா!! ராமன், கிருஷ்ணன் பிராமணர்களா?!! இவர் பாடும் புரந்திரதாச கீர்த்தனைகள் யாரால் பாடப்பட்டன!! பாவம் டி.எம்.கிருஷ்ணன். தானும் அர்விந்த் கெஜ்ரிவாலைப் போல ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில், குறுக்கு வழியில் தலைவர் ஆகலாம் என்ற கனவில், தனது இசைக்கு துரோகம் செய்து விட்டார். காலம் இவரை நிச்சயம் பழிக்கும்.பிரகாசமான அரசியலுக்கு வாழ்த்துக்கள்!மேக்சேசே விருதும், ஃபோர்ட் பவுண்டேஷனின் துணையும் இருக்க இனி கவலை என்ன!!மோடியை பற்றியும், இந்து மதத்தில் உள்ள ஜாதி அடக்கு முறைகளைப் பற்றியும் (பழைய படங்கள் பார்க்கவும்) பேசி தீருங்கள். உங்களுக்கென்று சில ஊடகங்கள் முந்தானை விரிக்கும். அப்புறம் என்ன.. காங்கிரஸ் கட்சியிலும் யாரும் இல்லை. வாழ்த்துகள் கிருஷ்ணா…தற்போதைய தில்லியின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் இந்த ‘‘வளர்ந்து வரும் தலைவர்கள்’’ வகையில் மேக்சேசே விருதை வாங்கியவர் தான். ஃபோர்ட் பவுண்டேஷன் தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவாலின் சம்பூர்ண பரிவர்தன் மற்றும் கபீர் அறக்கட்டளைகளுக்கு பெருந்தொகை கொடுத்து வருகிறது.இதன் மூலமாகத்தான் அர்விந்த் கெஜ்ரிவால் அன்னா ஹசாரே, கிரண்பேடி போன்ற தலைவர்களை, ஊழல் ஒழிப்பு போராட்டம் என்ற மேடையில் ஒருங்கிணைத்து உட்கார வைக்க முடிந்தது. பிறகு அவர்களை மெதுவாக அப்புறப்படுத்திவிட்டு, தான் இப்போது தில்லி முதல்வர் நாற்காலியின் தலைவராக உட்கார்ந்து கொள்ள முடிந்தது.இப்போது டி.எம்.கிருஷ்ணா, பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருவதால், கம்யூனிஸ கொள்கையுடைய ஆங்கில பத்திரிகை கிருஷ்ணாவை ஊக்குவித்து வருகிறது. மேலும் ஓரிரண்டு முறை, குடிசை பகுதிகளுக்கு சென்று இவர் அடித்த ஸ்டண்டுகளும் ஹிந்து பத்திரிகை மூலமாகவே வந்துள்ளது.இளையராஜாவிற்கு தான் விருது பொருத்தம்!பாமர மக்களிடத்தில் பாரம்பரிய இசையை எடுத்துச் சென்றதில் இளையராஜாவுக்கு தான் மிக பெரிய பங்கு உள்ளது என்பதை இசை உலகமே ஒத்துக் கொள்ளும். அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற அவரது கல்யாணி ராக பாடல், அம்மாக்கள் இந்த உலகில் உள்ளவரை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். பாடறியேன் படிப்பறியேன் பாடலும் இப்படி புகழ் பெற்றதுதானே.ஃபோர்ட் பவுண்டேஷன் 1952ம் ஆண்டு முதல் 2015 ஆண்டு ஏப்ரல் வரை இந்தியாவில் சட்டப்பூர்வமான பதிவு இல்லாமல் தான் இருந்தது. பேராண்மை கொண்ட மோடி தான் அதை மாற்றினார்!! ஃபோர்ட் பவுண்டேஷன் தன்னை ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்து கொண்டுள்ளது. இனிமேல் ஃபோர்ட் பவுண்டேஷன் தனது கணக்கு வழக்குகளை, இந்திய அரசிற்கு முறையாக சமர்பிக்க வேண்டும். காங்கிரஸ் அரசிடம் போக்கு காட்டியதைப் போல இனி நடக்காது.