அகில இந்திய வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 25-12-2016 அன்று நிகழ்த்திய உரையின் சாராம்சம்:

கருப்புப்பணம், ஊழல் இவற்றுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. ஊழலுக்கு எதிரான இந்தப் போரில் பொதுமக்களும் போர் வீரர்களைப் போன்று பங்கேற்க்க வேண்டும். இதிšல் மத்திய அரசு வெற்றி பெறுவதற்கு நாட்டுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஊழல்வாதிகள், பதுக்கல்காரர்கள் குறித்து உறுதியான தகவல்களை நாட்டுமக்கள் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தவறிழைத்தவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் நடவடிக்கை இத்தோடு முடிந்துவிடாது. ஊழலுக்கு எதிரான போரில் எங்களது நடவடிக்கையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம். கருப்புப்பணத்திகும், ஊழலுக்கும் எதிரான போரில் இருந்து நாம் பின் வாங்கிச் செல்வது அல்லது போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை...

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் நீக்க நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் அனைத்துவிதமான சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அனுபவிப்பதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் துளியும் உண்மை இல்லை. அவர்கள் சொல்வது தவறு. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். அது தனிநபராகவோ, அமைப்பாகவோ அல்லது அரசியல் கட்சியாகவோ இருந்தாலும் சரி, சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்தான். உயர் மதிப்பு ரூபாய் (ரூ. 500/- , ரூ. 1000/-) நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு அது தொடர்பான விதிகள் தொடர்ந்து மாற்றம் செயல்ப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மக்களின் பிரச்னைகளை குறைக்கவும், கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கையை பல்வேறு தந்திரமான முயற்சிகள் மூலம் தோற்கடிக்க முயற்ச்சிக்கும் சக்திகள் வெற்றி பெறாமல் தடுக்கவும் விதிகளில் இவ்வாறு அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் சோதனைகளில் நாள்தோறும் புதிய நபர்கள் ஏராளமானோர் பிடிபடுகின்றனர். அவர்களிடமிருந்து ஏராளமான ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்படுகின்றது. செல்வாக்கு மிக்க நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் உள்ள ரகசியம் என்னவெனில் இந்த நபர்கள் குறித்த தகவல்களை எனக்கு அளிப்பதே நாட்டுமக்கள்தான். முன்‹பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக அத்தகைய தகவல்களை அரசுக்கு பொது மக்கள் அளித்து வருகின்றனர். வரும் காலத்திலும் அரசு வழங்கியுள்ள மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் மை-கவ் (My Gov) செயலி மூலமாகவும் இத்தகைய தகவல்களை மக்கள்Ÿ அளிக்க வேண்டும்.

மற்றொருவர் பெயரில் சொத்துக்களை வாங்கி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைத் தடுக்க, கடந்த 1988 ஆம் ஆண்டில் பினாமி சொத்துக்கள் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. அது அறிவிக்கையாக வெளியிடப்படவும் இல்லை; பல ஆண்டுகளாக செயலற்றதாக கிடப்பில் கிடக்கிறது. அந்த சட்டத்துக்கு நாங்கள் புத்துயிர் கொடுக்கப் போகிறோம். பினாமி சொத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் கூர்மையான சட்டமாக அதை மாற்றப் போகிறோம். வரும் நாட்களில் அந்தச் சட்டம் செயல்படுத்தப்படும். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக எந்தெந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ அதை நாங்கள் நிச்சயம் எடுப்போம். அதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். மின்னணு வழி பணப்பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்காக லக்கி கிரஹாக் யோஜனா, வர்த்தகர்களுக்காக தகி தன் வியாபார் யோஜனா என இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதன்படி கிறிஸ்துமஸ் பரிசாக மின்னணு பணப்பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் தினமும் 15ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ. 1000 டெபாஸிட் செய்யப்படும். செல்போன், இணையதள வங்கி சேவை, ரூபே (RuPay) கார்டு, யு.பி.ஐ.,யு.எஸ்.எஸ்.டி உள்ளிட்ட மின்னணு முறைகள் மூலம் தினசரி ரூ. 50 முதல் ரூ. 3000 வரை பரிவர்த்தனை செய்யும் ஏழைகள் மற்றும் குறைவான வருமானம் உள்ள மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். குறிப்பாக ரூபே கார்டு பயன்படுத்தும் 30 கோடி மக்களில் ஜன்-தன் வங்கிக் கணக்குகள் வைத்துள்ள 20 கோடி பேர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இந்த திட்டத்தால் பயன்பெற முடியும்.

இதுதவிர வாரந்தோறும் ஒருவருக்கு அதிக மதிப்பில் (லட்சத்தில்) பரிசு வழங்கப்படும். இந்தத் தொகை, உரியவர்களின் வங்கிக் கணக்கிšல் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தப் பரிசுத் திட்டம் இன்று (25-12-2016) முதல் 100 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் லட்சக்கணக்கில் பரிசுகளை வெல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பம்பர் குலுக்கல் நடை பெறும். இதற்கான பரிசு கோடிக் கணக்கில் இருக்கும். அதுபோல் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு, அந்த முறையை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரிகளுக்கு வரிச்சலுகையுடன் பரிசும் வழங்கப்படும். தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது மின்னணு மற்றும் ஆன்லைன் முறையில் பணப்பரிமாற்றம், செய்யப்படுவது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருவதைக் காணும்போது மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில நாட்களாக டிஜிட்டல் பரிவர்த்தனை 200 சதவிகிதம் முதல் 300 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பாதுகாக்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேறப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொகுப்பு: கரிகாலன்