புதுக்கோட்டை மாவட்டத்தில், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டது 2008ம் ஆண்டில் தான். இப்போது ஆழ்துளை குழாய்கள் பொருத்தப்பட்டு, திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ள நிலையில் நெடுவாசல் கிராமத்தில் பல ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு போர் கொடி தூக்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு கூட்ட சமூக விரோதிகள்
ஜல்லிகட்டு போராட்டத்தில் எப்படி சமூக விரோதிகள் ஊடுருவினார்களோ அதேபோல இங்கும் வன்முறை நிகழலாம் என உளவுதுறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஜல்லிக்கட்டிற்க்கு வந்திருந்த அதே சமூக விரோத கும்பல் இங்கேயும் வந்துள்ளது அதிர்ச்சி தருகிறது என்றும் உளவுதுறை தெரிவித்துள்ளது.
வெடி மருந்து
கூட்டம் அதிகமானவுடன் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் தயாராக இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் இருப்பதாக ஆறுதல் கூறியுள்ளன.
என்ன காரணம்??
இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதை விட, பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும், அவரைப்பற்றி அவதூறு பேச வேண்டும் என்பதே முக்கிய நோக்காக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கூட்டம் பார்வையாளர்கள் நெடுவாசல் கிராமத்தினைச் சுற்றி தங்கியிருந்து, அங்குள்ள மக்களை பிரியாணி, பண உதவி என ஆசைக்காட்டுவதாகவும் பலர் கூறியுள்ளனர்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திட்டம்
உண்மையில் இது பாஜகவின் திட்டம் இல்லை என்பதே உண்மை. காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், இத்திட்ட பணியினை தொடங்க முடியாது என்பதே உண்மை நிலைப்பாடு. எனவே அன்றைய திமுக அரசின் திட்டம் தான் இது. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்ட மேற்கு வங்கத்திலும், பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரானிகன்ஜ் என்ற இடத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனவே பிரதமருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?? எதை தின்றால் பித்தம் தெளியும் என இந்த சமூக விரோதிகள் அலை பாய்கிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில்ஆபத்து இல்லை
இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பி உள்ளன. எரிபொருள் இறக்குமதிக்கு அதிக அந்நிய செலாவணி செலவாகிறது. நம்நாட்டில் ஏன் எரிபொருளை தேட கூடாது எனும் முயற்சியில் தான் தமிழ்நாட்டில் 31 இடங்களில் எரிபொருள் உள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ் நாட்டில் 31 இடங்களில் இத்திட்டம் நடந்தேறி வருகிறது. புதுச்சேரி, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதை கண்டு பிடித்து அதனை வெளியே எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்று இருக்கின்றன. இயற்கை எரிவாயுவின் அறிவியல் பெயர் தான் ஹைட்ரோ கார்பன் இதனை எடுப்பதால் சுற்றுச்சூழல் ஆபத்தில்லை!!
ஹைட்ரோ கார்பன் எடுப்பது எப்படி?
பூமிக்கு அடியில் எல்லா இடங்களிலும் எரிபொருள் வாயு கிடைப்பதில்லை. ஷேல் என்ற இறுகிய களிமண் படிவுப் பாறை இருக்கும் இடங்களில்,பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிடைக்கும்.
நிலத்தடியில், பல அடுக்குகளாக களிமண் படிந்து, கல்லாக மாறுகிறது. சமையலறை கட்டுமானத்தில் பயன்படும் கடப்பா கல், முந்தைய காலத்தில் மாணவர்கள் எழுத பயன்படுத்திய கல்சிலேட் போன்றவை, இந்த வகை களிமண் படிவம் ஆகும். முந்தைய காலத்தில் புதையுண்ட மரங்கள், செடிகள் போன்ற தாவர வகைகள் அழுகி உருவானதே, ஹைட்ரோ கார்பன் வாயு.ஷேல்களிமண் அடுக்குகள், மிக நுண்ணிய துகள்களாலானவை என்பதால் அவற்றை தாண்டி, ஹைட்ரோ கார்பன் வாயு வெளிவர முடியாமல் அங்கேயே தங்கிவிடும்.
நிலத்தின் மேற்பகுதியில், அதிக பட்சம், 1,000 அடிக்குள் மட்டுமே நீர் இருக்கும் மணல் அல்லது பாறைப்பகுதி இருக்கும். ஆனால், எரிவாயு அல்லது கச்சா எண்ணெய், குறைந்த பட்சம், 3,000 அடி ஆழத்திற்கு கீழே தான் இருக்கும்.
பூமியில் துளையிட்டு, துருபிடிக்காத குழாயை புகுத்தி, ஹைட்ராலிக் விசை தொழில் நுட்பம் மூலம் பூமிக்கு கீழே எந்த பகுதியிலும் எரிவாயு எடுக்க முடியும். குழாய் மூலம் வாயுவை எடுக்கும் போது சரியான அழுத்தம் கிடைக்காமல், ஹைட்ரோ கார்பன் வாயு தங்கிவிடும். அதை எடுக்க, குழாய் வழியாக உள்ளே நீர் செலுத்தப்படும். நீரை விட காற்றின் எடை குறைவு என்பதால் நீர் உள்ளே சென்றதும் வாயு மேலே வரும். அதற்காக, பூமிக்குள் நீர் செலுத்தப்படுகிறது.
சில நேரங்களில், எரிவாயு ஆங்காங்கே விலகி, நீண்ட து£ரத்தில் இருக்கும். அதை எடுக்க, பூமியின் ஆழத்தில் பல அடி நீளத்துக்கு, மேலே தெரியாமல் சிறிய குகை போன்று உள்ளேயே துளையிட்டு குழாய்கள் பதிக்கப்படும். பல கிலோ மீட்டருக்கு துளைகள் போட்டு, வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பம் உள்ளது.
வளர்ந்த மற்றும் வல்லரசு நாடுகளும் ஹைட்ரோ கார்பன்திட்டமும்
1.சவூதி அரேபியா, 2.இஸ்ரேல், 3.அமெரிக்கா, 4.ரஷ்யா
உலகத்திலேயே ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் முதலிடம் வகிப்பது சவூதிதான் அப்படி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் எப்படி இவர்கள் எடுக்காறார்கள் அங்க உள்ள மக்கள் சுற்றுச்சுழலால் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்? நான் சவூதியை சுட்டிக்காட்டியவுடன் பலர் அது பாலைவனநாடு அங்கு இது பிரச்சனை இல்லை என்று கூறலாம்.
சவூதி
தனது பாலைவன நாட்டை கூடிய விரைவில் பசுமை சோலையாக மாற்றுவோம் என்று வெளிப்படையாக கூறியுள்ளது.
2.விவசாயத்தில் நாங்கள் கூடிய விரைவில் தன்னிறவை அடைந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்கள்
தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில் எடுக்கப்படும் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுவிடும் என்று போராடுபவர்கள் சவூதி முழவதும் இன்று பெட்ரோல் துளைகள் போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் எப்படி இவ்வளவு தைரியமாக நாங்கள் எங்கள் நாட்டை பசுமையாக மாற்றுவோம் என்று கூறினார்கள்?
இஸ்ரேல்
அவர்களின் உழைப்பும் அறிவுமே ஞாபகத்துக்கு வருகிறது பாலைவன நாடாக இருந்து இன்று பசுமையின் தாயகமாக இருக்கிறது. ஆம் அவர்கள் விவசாயத்தில் நூறு சதவித்திற்கு மேலே தன்னிறைவு அடைந்த நாடு 80 சதவீகித காய்கள் பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்
தண்ணீர் ஏற்றுமதியில் உலகில் முதல் இடம்
இது அத்தனையும் 100% வீத இயற்கை விவசாயம் என்பது மிகப்பெரிய ஆச்சரியம்
அவர்கள் நாட்டில் 80 சதவீதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வைத்தே தனது மின்சார தேவையில் இருந்து வாகன எரிபொருள் தேவை வரை அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்கிறார்கறள்.
நம் வீட்டில் எலி இருந்தால் நாம் என்ன பண்ணுவோம் எலி மருந்தை வாங்கி வைப்போம்
ஆனால் இஸ்ரேலில் லட்சக்கனக்கான எலிகள் விவசாயத்தை நாசம் செய்த போதும் அவர்கள் எலி மருந்தை பயன்படுத்தவில்லை ஏன் தெரியுமா அப்படி எலி மருந்து பயன்படுத்தினால் அந்த இடத்தில் வளரும் செடி நச்சு தன்மை உடன் வளரும் என்று தெரிந்து வீட்டிற்கு ஒரு விவசாயி எலியை பிடிக்க ஆந்தை வளர்க்கிறார்கள்
பாலீதின் கவர்களை சர்வசாதரனமாக பொது இடத்தில் தூக்கி போட்டு செல்லும் நாமே ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று கூவும் போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதை உயிர் மூச்சாக கொண்டு இருக்கும் இஸ்ரேல் காரன் எப்படி ஹைட்ரோ காரபன் திட்டத்தை தனது நாட்டில் பயன்படுத்தி கொண்டு இருக்கிறான் ?
அமெரிக்கா
இந்த நாடு உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாடு வளர்கின்றது என்று தெரிந்தால் அதனை தடுக்க போர் கூட தொடுக்க தயங்காதவர்கள் அப்படி இருப்பவர்கள் தனது சுற்றுச்சுழலை கெடுக்கும் என்று தெரிந்தும் துளைபோட்டு பெண்ட் குருடு எடுப்பார்களா?
நீங்கள் உடனே சொல்லலாம் அமெரிக்கா சவூதியில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்குகின்றது என்று ஆம் வாங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது குறைத்து விட்டார்கள் பெட்ரோல் தேவையில் முதல் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா அது தனது சொந்த உற்பத்தியை தொடங்கி பெருமளவில் எடுத்து வருகிறது (பெண்ட் குருட்).
அதனால் தான் கச்சா எண்ணெய் பேரலுக்கு 37 அமெரிக்க டாலர் என்று கடும் வீழ்ச்சி அடைந்தது அப்பொழுதுதான் நாம் எல்லாம் அனைத்து நாடுகளையும் சுட்டிக்காட்டி இந்தியாவில் தான் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை மற்ற நாடுகள் எல்லாம் ரொம்ப கம்மியான விலைக்கு தருகிறார்கள் என்று மத்திய அரசை 15 நாட்களுக்கு ஒரு முறை திட்டி வருகிறோம்(15 நாட்களுக்கு ஒரு.முறையே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன)
விலை நம் அரசாங்கம் குறைக்காததிற்கு காரணம் சோவியத் யூனியனாக இருந்து நாட்டை கோதுமையை வைத்து அமெரிக்க உடைத்து இன்று இருக்கும் ரஸ்யாவை உருவாக்கியது போல் இந்தியாவை பெட்ரோல் டீசலை வைத்து அமெரிக்கா உடைத்து விடுமோ என்ற பயத்தினாலயே மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை (தெளிவாக இதை வேறு ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன்)
ரஷ்யா சீனா
போனஸ்சாக சீனாவை சேர்த்தியுள்ளேன் இந்த நாடுகளுமே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமலில் வைத்திருக்கிறார்கள்.
ஒரு நாடு அமெரிக்காவால் மிகவும் பாதிக்கபட்ட நாடு மற்றொன்று அமெரிக்காவால் பெருமளவில் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் நாடு இருவருமே அமெரிக்காவின் உலகின் முதல் வல்லரசு இடத்தை பிடிக்க துடித்து கொண்டு இருக்கிறார்கள் (ரஸ்யா அரேபியா நாடுகளுக்கு அடுத்து கச்சாய் என்னை வளம் கொண்ட நாடு என்பது குறிப்பிட தக்கது)
அப்படிப்பட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தனது நாட்டை பாலைவனமாக மாற்றுவார்களா?
விவசாயம் நிலத்தடி நீர் பாதிக்குமா?
பூமிக்கு கீழே மணல் அல்லது பாறைகள் உள்ள, 1000 அடி ஆழத்திற்குள் தான், நிலத்தடி நீர் இருக்கிறது. ஆனால் ஹைட்ரோ கார்பன் வாயு,3000 அடிக்கு கீழேயிலிருந்து, சிறிய குழாய்கள் மூலமே எடுக்கப்படுகிறது. இந்த குழாய்களில் கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏற்பட்டாலும் அவை மேல்மட்ட நிலத்தடி நீரோடு கலக்காது.
அதேபோல கீழே களிமண் அடுக்குகள் இருக்கும் பகுதியில் ஹைட்ரோ கார்பன் உள்ளதால், அங்கு ஊடுருவும் நீரால், பல ஆயிரம் அடிக்கு மேலே இருக்கும் நிலத்தின் மேலடுக்கு பகுதிக்கு வர முடியாது. எனவே மேலேயிருக்கும் விவசாயத்துக்கோ, நிலத்தடி நீருக்கோ பாதிப்பு வராது.
பேராசிரியர் எல். இளங்கோ
தலைவர், நில அமைப்பியல் துறை அண்ணா பல்கலைகழகம்