பெரிய திருவிழா நடக்கிறது.வழக்கமான காட்சிகள்.ரங்கராட்டினம். அதை மொய்க்கும் வாண்டுகள்.இனிப்புப் பலகாரக் கடைகள், வளையல், ரிப்பன் விற்கும் கடைகள். வித்தைக்காட்டும் குழுக்கள். இவற்றையெல்லாம் வட்டமடிக்கும் பல முதியோரும், இளையோரும், ஆண்களும், பெண்களும். நாடாகும் திருவிழா சுவாமிக்காக என்பதை அதனை பெரும் சற்று நேரம் மறந்துபோவதுண்டு. ஆனால் உள் மனதில் தெய்வபக்தி சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இன்றும் திருவிழா போலவே, பசுவைப் பற்றி சகட்டுமேனிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கர்ஜனைகளும் புலம்பல்களும் பொதுவெளியை ஆக்கிரமிக்கின்றன. எதிலும் ஈடுபடாத ஏராளமானவர்கள் இதையெல்லாம் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, படித்துவிட்டு அன்றாட அலுவல்களைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். ஆனால் 33 கோடி தெய்வங்கள் பசுவிடம் குடிகொண்டிருப்பதால் பசு நமக்கு மாதா, தெய்வம் என்ற ஆதார ஸ்ருதியான ஆன்மிகம் அனைவர் மனத்திலும் ( ஹிந்து கடவுளர்களை வழிபடுகிறார்கள், இஸ்லாம் கிறிஸ்துவ மதங்களை சேர்த்தவர்கள் என அனைவர் மனத்திலும்) ஆழமாக பதிவாகியிருப்பது மெல்ல மெல்ல புலனாகத் தொடங்கியிருக்கிறது.

பசுவிற்கு ஆதரவாக வாதங்களை முன்வைப்பவர்கள் பசும்பால் ஆரோக்கியத்திற்கு நல்லது, பஞ்ச காவ்யம் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது என்று பேசுகிறார்கள். பாரம்பரியமான இந்த அனுபவம் மெல்ல மெல்ல நவீன விஞ்ஞான சோதனைகளால் உண்மை என நிரூபணமாகி வருகிறது. ஆரோக்கியம் போலவே பசுவினத்தால் விவசாயத்திற்கு ஈடு இணையற்ற பயன் உள்ளது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. உரம்,பூச்சி விரட்டி, நுண்ணூட்டச் சத்து என்று பஞ்சகாவ்யம் அமிர்தமாகவே போற்றப்படுகிறது. பூமியை புண்ணாக்காமல் பாசன நீரை சேதாரம் ஆக்காமல் விவசாயம் செய்வது லாபமும் பார்ப்பது இன்றைய தலைமுறையினர் கவனத்திற்கும் வந்திருப்பதால் விவசாய குடும்பங்கள் தவிர ப நாடுகளுக்குச் சென்று திரவியம் தேடி வந்தவர்கள் கூட விவசாயத்தில் ஈடுபடுவது அன்றாட செய்தியாகி வருகிறது.

இந்த அத்தனை மாற்றங்களுக்கும் மூல விக்கிரமாக விளங்குவது பசு. மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு , இதெல்லாம் ஒருபுறம் , அரசுகளின் ஆதரவு, அரசுகளின் நடவடிக்கை இதுயெல்லாம் மறுபுறம். சமீபகாலமாக பசுவதையை தடுக்கவும் பாரத பூமியில் பசுப்பாதுகாப்பை திடப்படுத்தவும் பல்வேறு மாநிலங்களில் இயற்றப்படும் சட்டங்களும், இயற்றப்படாத மாநிலங்களில் கூட வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றன.

காற்றை, பூமியை, தண்ணீரை, மாசுபடுத்தாத விவசாயம், தாய்ப்பாலுக்கு நிகரான கோமாதா அமுதம், பசு தரும் ஒளடதங்கள் இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தேசிய அரங்கில் இறைச்சி ஏற்றுமதி தொழில் எங்கோ ஒரு மூலைக்கு ஓடிவிடுகிறது. பாமரனுக்கு புரிகிற இந்த விஷயம் அறிவாளிகள் கும்பலுக்கு எட்டாமல் போனது துரதிருஷ்டம். விரைவில் கோமாதா ஆதரவு பேரவையில் அறிவீனர்களின் அசட்டுத்தனங்கள் அடித்துக்கொண்டு போகப்போவது நிச்சயம்.

இடைக்காலத்தில் ரங்கராட்டினம் சுற்றும், இனிப்பு பலகார கடையில் வியாபாரம் சக்கைபோடு போடும்; வித்தைக் காட்டுபவர்கள் காட்டுவார்கள். சுவாமி புறப்பாடு தொடங்கியதும் காந்த விசையால் எல்லா ஊசிகளும் ஒரே திசையை நோக்குவது போல தெய்வபக்தி எல்லோர் கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்த செய்துவிடும். இதோ, கோமாதா கோலோச்ச எழுந்தருளுகிறாள்.

துணுக்கு:

கோமாதா பணியில் பயஸ் கான்:

சத்தீஸ்கர் மயிலம், ராய்பூரை சேர்ந்த பயஸ் கான், ஊர் ஊராய் பொய் பசுக்கள் குறித்த நீதி கதைகள் சொல்லி, பசு வடையை தடுக்கவும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். " பசுவதையை தடுக்க புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதோடு, அந்த சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்மாட்டிறைச்சி ஏற்றுமதியே, பசுவதைக்கு மூலகாரணம் என்பதால், இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும்." இவன் எல்லாம் பயஸ் கானின் ஆசைகள். ராய்பூரில் பேராசிரியராக பணியாற்றி வந்த அவர் அந்த வேலையை உதறி விட்டு, பசு பற்றி கதைகள் கூறும் பணியில் மூழ்கியுள்ளார்.

நேபாள தேசிய விலங்காகிறது பசு

நேபாள நாட்டின் தேசிய விலங்காக பசு அறிவிக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற நாடக தமது அரசியல் அமைப்பை மாற்றி கொண்ட நேபாள நாட்டின் தேசிய விலங்காக, ஹிந்துக்களின் புனித விலங்கான பசு அறிவிக்கப்பட்டுள்ளது.2017 ஏப்ரல் 3 அன்று இந்த புதிய சாசனத்தை ஏற்ற நேபாள அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.மேலும், தேசிய விலங்காக பசு இருப்பதால் , அதைக் கொல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று நேபாள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிருஷ்ணா பிரசாத் சித்துலா தெரிவித்துள்ளார்.

பாரதத்திற்கும் பசுவே விலங்கு

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிற்குமாறு அஜ்மீர் தர்காவின் திவான் ஜெய்னுல் ஆபுதீன் அலி கான் ( ஆன்மீகத் தலைவர்)வலியுறுத்தியுள்ளார். நாட்டில் மத நல்லிணக்கம் மலர இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். "நாட்டில் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்குமாறு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும். மாட்டிறைச்சியை உன்ன கூடாது. இதன் மூலம் நாட்டுக்கு நல்ல செய்தியை விடைக்க வேண்டும். பசுக்கள் மத நம்பிக்கையின் அடையாளம். அரசு மட்டுமல்லாது, மதங்களை கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் அவற்றை பாதுகாப்பதைத் தனது கடமையாக கருத வேண்டும்" இவ்வாறு ஜெய்னுல் ஆபுதீன் அலி கான் பேசினார்.

கோமாதா புண்ணியத்தில் ஏசி

வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்ப வெட்ப நிலை இருந்தாலும் சரியாக 28.83 C வெட்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை வீடுசுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காயவைக்கும் பழக்கம் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இருந்தது. அது சும்மா இல்ல!