உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டதாகவும் சதிச் செயலுக்கு திட்டம் தீட்டியதாகவும் முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூசன் ஜாதவ் கைது செய்யப்பட்டு,மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அநாகரிக செயல் பாகிஸ்தானின் காட்டுமிராண்டித் தனத்தையும் அடாவடித்தனத்தையும் காட்டுகிறது.இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமது கமால் வாழ்வது மற்றும் அனுபவிப்பது பாரத தேசத்தில், விசுவாசமாக இருப்பது பாகிஸ்தானுக்கு.இந்த தேச துரோக செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் நாட்டின் சட்டப்படிதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதில் இந்தியா தலையிட எந்த முகாந்திரமும் கிடையாது என கூறியிருப்பது மிகப் பெரிய தேச துரோக செயல்.

மார்ச் 3, 2016 அன்று ஈரானிலிருந்து கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளன. இந்த செய்திக்கு மாறாக,பாகிஸ்தான் அரசாங்கம்,பலுகிஸ்தானில் கலவரத்தை உருவாக்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டை சுமதி மரண தண்டனை விதித்துள்ளது. இதற்குரிய ஆதாரங்களை பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் அரசு வாக்குமூலம் ஒன்றைத் தவிர வேறெதுவும் காட்ட முன்வரவில்லை.

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான அஜ்மல் கசாப் பற்றிய 400 கோப்புகளை பாரத அரசு பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பித்து,பின்னர் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே அஜ்மல் கசப்பிற்கு வாதாட ஒரு வழக்கறிஞர் நியமித்துக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது.இந்தியாவின் இந்த செயல்பாட்டுக்கு மாறாக பாகிஸ்தான் அரசிடம் 13 மாதங்களாக 13 முறை வாய்மொழியாக விளக்கம் கேட்டும், பின்னர் வாதாட ஒரு வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கேட்டும் கூட, ராணுவ நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு மாறாக எதுவும் செய்ய இயலாது எனக் கூறிவிட்டது.

பாகிஸ்தான் அரசானது குல்பூசனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை பார்த்தால் சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரானில் நிகழ்ச்சி வணிகம் நடத்தி வந்தவர் குல்பூசன் ஜாதவ். ஹுசைன் முபாரக் பட்டேல் என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்து தொழில் புரிவதை கண்டுபிடித்த பாகிஸ்தான். ஓய்வுபெற்ற முகமது ஹபீப் ஷாகீர் என்பவருக்கு குல்பூசனை கண்காணிக்கும் பணி கொடுக்கப்பட்டது. இப்பணியின்போது பல்வேறு வழிகளில் முயன்றும் எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் 2015-ல் குல்பூசன் நேரடி தொடர்பு ஓமனில் ஏற்படுகிறது. இந்த தொடர்பின் மூலமாக, மும்பையில் உள்ள குல்பூசன் குடும்பத்தினரிடம் மராட்டியில் உரையாடி சில விஷயங்களை சேகரித்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தான். இந்த தகவல்கள் கூட குல்பூசன் கலவரத்தை தூண்டியதாக புகார் கிடையாது. வேறு பெயரில் பாஸ்போர்ட் எடுத்து ஈரானில் தொழில் புரிவது மட்டுமே அரசுக்கு கிடைத்த தகவல்.

பின்னர் முகமது ஹபீப் ஷாகீர் நேபாளத்தில் உளவுவேலை செய்தபோது, காணாமல் போய்விட்டார். ஏப்ரல் 2-ம் தேதி ஓமானிலிருந்து நேபாளத்திற்கு வநதவர், லும்பினிக்கு சென்றதாகவும்,அதன் பிறகு அவரிடம் எந்த தொடர்பும் ஏற்படவில்லை என்றும் ஷகீரின் மகன் ராவல் பிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான். இந்த புகாரில் நேபாளத்தின் எல்லையில் என்னது தகப்பனாரை பகையாளி கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஷகீரை இந்திய அரசாங்கம் பிடித்து வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், குல்பூசன் ஜாதவை முகமது ஹபீப் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து அவசர அவசரமாக ராணுவ நீதிமன்றத்தில் மரண தண்டனை விதித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்திகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக ராணுவ நிலையில் உள்ள பல்வேறு தரப்பினர் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டில் ஒன்றான, இந்தியாவில் உள்ள 'ரா' அமைப்பு, குல்பூசனுக்கு பாகிஸ்தானில் கலவரத்தை உருவாக்க நிதி வழங்கியது என்பது. இதற்குரிய ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் 1969 லிருந்து பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து வந்தது என்பது உலகமறிந்த உண்மை.

கடத்தப்படும் போதைப்பொருள்கள் மூலம் கிடைக்கும் நிதியில் ஒருபகுதி இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குக் கிடைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு அந்த ரூ. 10 கோடி பெறுமான போதைப்பொருள் பிடிக்கப்பட்டது.

JK02F-0217 என்ற பதிவுபெற்ற சரக்கு லாரி சாலமாபாத் மற்றும் அமன்சேது என்ற இடத்தில நடத்தப்பட்ட சோதனையில் பிடிப்பட்டது. இந்த லாரியின் ஓட்டுநர் அப்துல் அஹத் கனி என்பவனிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன, எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்பு இருக்கின்றது என்ற விவரங்கள் தெரியவந்தன.

ஸ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக் என்ற கடையில் இறக்கிவைத்துவிட்டு திரும்பிவந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினர் வண்டியை சோதனை செய்தபோது , அதில் ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட 'கோக்கைன்' என்பது தெரிய வந்தது. இதன் காரணமாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள், வழக்கு என் 47L2013 (FIR NO 47/ 2013) பிடிபட்ட டிரைவர் தனது வாக்குமூலத்தில், இப்பொருள்களை காஷ்மீரில் உள்ள ஒருவரிடம் டெலிவரி செய்ய வேண்டும் , பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு, அதனிலிருந்து வரும் பணம் தீவிரவாத- பயங்கரவாத- பிரிவினைவாத செயல்களுக்கும், பாகிஸ்தான்- காஷ்மீர்- தலிபான் போன்ற இணைப்புப் பாதை.

ஆகாவே சீனாவின் மறைமுக ஆதரவு இருப்பதால், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவை தூண்டிவிடும் செயலில் இறங்கியுள்ளது. அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது கூச்சலிட்ட இடதுசாரிகள், இந்த துரோக செயலுக்கு எவ்விதமான கருத்தையும் கூறாமல் இருப்பது, சீன எஜமான் விசுவாசம் என்றால் மிகையாகாது.