அறிவிப்பது ஒன்றும் அதன் பின்னான செயல்பாடுகள் எதிரான ஒன்றாகவும் இருப்பது தான் இன்றைய அ ர சு க ளி ன் வ ழ க் க ம £ ன நடைமுறையாக ஆகிவிட்டது. தமிழக விவசாயிகள் உலகில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் விவசாயிகளின் போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களைப் பெறத் தொடங்கிவிட்டன. இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று, மரபணு மாற்றக் கடுகு பிரச்சினை காரம் குறையாமல் கிளம்பியுள்ளது. 

காரம் கூடுகிறது:

கடுகுப் பிரச்சினைதானே என அளவில் ஒதுக்கிவிட முடியாது. காரம் எவ்வளவு வேண்டும் என்பதையும் இந்த அதிகாரங்கள் நம் உணவு பற்றி தீர்மானித்துவிட முடியுமா?

எல்லாம் ஓய்ந்து விட்டது அல்லது தற்காலிகமான ஒரு இடைவெளி போடப்பட்டுள்ளது என்றிருந்த நிலையில் மத்திய அரசின் நீண்ட கரங்கள், மீண்டும் கடுகுப் பிரச்சினையை பேருருவம் எடுக்க வைத்துள்ளன. எந்தெந்த முனைகளில் இருந்து அந்தத் தாக்குதல் மத்திய அரசால் தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? சென்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தே ஏன் வாஜ்பாய் பிரதமராக இருந்த முந்தைய பாஜக ஆட்சிக் க காலத்தைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

அப்போது இருந்தே, வேறு பிரச்சினைகளில் மக்களை மடை மாற்றி விட்டு, தீராத பிரச்சினைகளை மக்களிடம் ஓசைப்படாமல் திணிக்கும் அரசின் நடைமுறை தொடங்கிவிட்டது. அந்த வழியில் இன்றைய மத்திய அரசு சலங்கை கட்டி ஆடிவருகிறது.

தொடரும் பிரச்சினைகள்:

இன்று இந்திய இறையாண்மைக்குச் சவாலாக, நமது சந்தையின் ஆண்மையை, சுயத்தன்மையை ஒட்டு மொத்தமாக உறிஞ்சவும், நமது நாளைய தலைமுறையை நிரந்தர நோயாளிகளாக்கி விடவும் முனைகின்றன மரபணு மாற்றுப் பயிர்கள்.

1960-களில் உணவுப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்தியாவில் வரவேற்புடன் நுழைந்த பசுமைப்புரட்சி, வறுமையை வளமாக இங்கே உருவாக்கி விட்டது. வீரிய ஒட்டு ரகங்கள், வேதி உரங்கள் இங்கே இயல்பாக விளைந்து வந்த வேளாண் தொழிலை, மரபுக்கு அப்பால் தள்ளி மலடாக்கின.

உரம், பூச்சிக் கொல்லி, வீரிய விதைகள், சாகுபடிக்கு மானியம் என்ற கவர்ச்சி வார்த்தைகளும், உடனடி மகசூல் என்ற ஈர்ப்பு மந்திரமும் (!) வானம் பார்த்துச் செய்து வந்த உழவின் மேன்மையை உயிரற்றதாக்கி, அதை அரசின் தானத்தை எதிர்நோக்கும் பிச்சைத் தொழிலாகவே மடைமாற்றிவிட்டன. 2002& இல் பி.டி.பருத்தி, 2009&இல் பி.டி.கத்தரிக்காய் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது 2016 முதல் பி.டி. கடுகு (மரபணு மாற்றக்கடுகு) வந்துள்ளது. முன்பு வெளிநாட்டு நிறுவனங்களால் உள்ளே நுழைந்த மரபணு மாற்றப்பயிர், இம்முறை உள்ளே நுழைய, ‘கடுகு’ மூலமான கண்டுபிடிப்பைச் செய்தது டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்.

தீர்ப்புகள் திருத்தப்படுமா?

இந்தப் பல்கலைக்கழகத்தின் ‘தாவரங்களின் மரபியல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பெண்டல் மற்றும் அவரது குழுவினர். DMH-II (Dhara Mustard Hybrid-II) எனப்படும் மரபணு மாற்றக் கடுகுப் பயிருக்கு தங்களின் கண்டுபிடிப்பு என உரிமை பேசி, வர்த்தகம் பயன்பாட்டுக்கான அனுமதி கேட்டும் மத்திய அரசிடம் விண்ணப்பித்தனர்.

மரபணுப் பயிர்களை நம் நாட்டில் அனுமதிப்பதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் அதிகார அமைப்பின் பெயர் GEAC என்பதாகும். (‘Genetic Engineering Appraisal Committee’) தமிழில் இதன் பொருள் மரபணு தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு என்பதாகும். இந்த அமைப்பு மரபணுக் கடுகு பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க ஒரு தனிக் குழுவை அமைத்தது. அத்துணைக் குழுவின் தொழில் நுட்ப வல்லுநர்கள் ‘ஆகா, ஓகோ, பேஷ், பேஷ் மரபணு மாற்ற கடுகை நம் நாட்டில் பயிரிட அனுமதிக்கலாம்’ எனப்பரிந்துரை செய்துவிட்டனர்.

மக்களிடம் ஏதாவது ஒரு பிரச்சினையை எப்போதும் திணிக்க வேண்டும் என்றே செயல்பட்டுக் கொண்டே இருக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் அதை அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பால் அனுமதிக்கும் முடிவை தற்காலிகமாகத் தள்ளிப் போட்டது ‘மரபணு தொழில் மதிப்பீட்டுக் குழு’.

எதிர்ப்புகளின் நியாயம்:

பரபரப்பாக எழும் பிரச்சினைகளில் பதுங்கிக் கொள்வதும், பின்னர் அது மெல்ல மெல்ல ஓசைப்படாமல், பகுதி பகுதியாகத் திணிக்கப்படுவதும் இந்தியாவில் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பலரின் எதிர்ப்புகளையும் மீறி, மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிட அனுமதி கோரி, வர்த்தக ரீதியில் விற்பதற்காக அதை சோதனை முறையில் பயிர் செய்து பார்ப்பதற்கான மனுக்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மரபணு தொழில் நுட்பக் குழு பரிந்துரை செய்திருந்தது.

அப்பரிந்துரையின் பேரில், விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இப்படிப்பட்ட அனுமதியானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பல்வேறு நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில் நுட்பத்துறையினர் இதை எதிர்த்து எச்சரித்துள்ளனர்.

இதையெல்லாம் மீறி சோதனை, வர்த்தகம் என்ற ரீதியில் பெறப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்க வேண்டும் என மரபணு மாற்றத்தை எதிர்ப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள் 20 ல் 17 நாடுகள் மரபணு மாற்றப்பட்ட (ஜி.எம்) பயிர்களைச் சாகுபடி செய்ய முழுமையான தங்கள் மறுப்பைத் தெரிவித்து விட்டன.

இதில் ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல், ஐரோப்பின் பெரும்பாலான நாடுகள் வருகின்றன. மனத்தடைகளை உடைப்பதற்காக இந்தியாவில் ‘சுதேசி’ மரபணு மாற்றப்பட்ட பயிரைக் கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள். சுதேசியோ, விதேசியோ (அன்னிய நாட்டு பொருள் அறிமுகம்) மரபணு மாற்றப்பட்ட பயிர் என்றாலே அதன் தீய விளைவுகள் ஒன்றுதான்.

பாதிப்புகளின் பட்டியல்:

ஜி.எம்.கடுகை மதிப்பிட்டதில் பல குறைபாடுகள் உள்ளன. நுகர்வோருக்கு வரும் நோய்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படப்போகும் சேதங்கள், வேளாண்மைக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் போன்றவை முறையாகக் கணக்கிடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் ‘பீட்டா’ (BT) கத்திரிக்காய்க்கு மேற்கொண்டஅளவிலான சோதனைகள் கூட செய்து பார்க்கப்படவில்லை. முக்கியமான ஒன்று. இந்தியாவில் கத்கரிக்காயை விட கடுகுச் சாகுபடியானது அதிகப் பரப்பிலும் அதிகமான மாநிலங்களிலும் செய்யப்படுகிறது என்பது தான்.

மரபணுக் கடுகு தாங்கள் கண்டுபிடித்தது என டெல்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெண்டால் மற்றும் அவரது குழுவினர் உரிமை பேசி வருகின்றனர். ஆனால் இது அவர்களின் கண்டுபிடிப்பல்ல. 2002-இல் பேயர் நிறுவனத்தின் ‘ப்ரோ&அக்ரோ விதைக்கம்பெனி’ உருவாக்கிய மரபணுக் கடுகின் தொழில்நுட்பம் தான் என்று உண்மையை உரக்கச் சொல்லுகிறார்கள் சுற்றுச்சூழலை நேசிக்கும் அறிவியலாளர்களும் சமூக நேசிப்பாளர்களும்.

கடந்த மாதம் ஒன்றாம் தேதி மறைந்த ‘இந்திய மரபணுப் பொறியியலின் தந்தைÕ என அழைக்கப்படும் டாக்டர் புஷ்பமித்ர பார்கவா மரபணுக் கடுகைக் கடுமையாக எதிர்க்கிறார். மரபணுக் கடுகுத் தொடர்பான ஆய்வில் பல ஓட்டைகள் உள்ளன. உயிர்ப்பாதுகாப்பு சோதனைகள் போதாது. ஒழுங்குமுறை, கட்டுப்பாடு சரியில்லை. அத்துடன் இது நிலையற்ற தொழில்நுட்பம்.

குறிப்பாக ஒருமுறை ஏதாவது ஒரு தாவர உயிரினத்தில் மரபணு பயிர் கலந்துவிட்டால், அதனால் ஏற்படும் பின் விளைவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எதையும் மீட்கவும் முடியாது என்பதே நான் இதை எதிர்க்கக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லவை நஞ்சாக விடலாமா?

நம் நாட்டில் 50லிருந்து 60 சதவீதத் தேன் கடுகுச் செடிகளின் பூக்களில் இருந்து தான் உற்பத்தியாகிறது. கடுகுச் செடியின் மஞ்சள் நிறப்பூ தேனிக்களின் விருப்பத்திற்கு உரியது. ஆப்பிள் மரங்களுக்குக் கீழ் தேன் வளர்த்தால், தேனீக்களின் வருகையால் ஏற்படுகின்ற மகரந்தச் சேர்க்கையின் காரணமாக, ஆப்பிள் உற்பத்தி அதிகரிக்கும் எனத் தாவரவியல் ஆய்வு மாணவியான ஜெயா தாக்கரே கண்டறிந்திருக்கிறார்.

மரபணு மாற்றக் கடுகு கொண்டுவரப் படுவதற்கான அவசரத் தேவை என்ன?

கடுகுப் பற்றாக்குறை இந்தியாவில் நிலவாத போது இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்தை அரசு தருகிறது எனக் கேட்கிறார் இயற்கை வேளாண் அறிஞரான மரபணு மாற்று விதைகளும் பசுமைபுரட்சிக்கு ஏற்பட்ட விளைவை உருவாக்கக் கூடியவை. நிச்சயமாக இது அறிவியல் தொழில்நுட்பம் கிடையாது.

தொழில் நுட்பத்தைக் கொண்டு நிகழ்த்தப்படும் தகிடுதத்த வேலை (Manipulation Work) என்கிறார் அவர். உச்சநீதிமன்றத்தின் ஆணையால் பி.டி.கத்திரிக்காய் குறித்த அனைத்து ஆவணங்களும் பொது வெளியில் (மக்கள் பார்வைக்கு) வைக்கப்பட்டுள்ன. ஆனால் மரபணு மாற்றுக்கடுகு குறித்த ஆவணங்களில் இந்த வெளிப்படைத் தன்மையில்லை? ஏன் இதை ரகசியமாக வைக்க வேண்டும்.

மேற்கண்ட இந்தக் கேள்விகளின் அடிப்படையில் தான் சமூக நலம் விரும்பும் அனைவரும் மரபணு மாற்றக்கடுகுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்கள்.

கடுகு சாகுபடியும், உற்பத்தியும்:

இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை முக்கிய சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. வடக்கு கிழக்கு மாநில மக்கள் பாரம்பரியமாக கடுகு எண்ணெயை த் த £ன் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கடுகு விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களிலும், சில இடங்களில் சிறு விவசாயிகளால் கோதுமையில் ஊடு பயிராகவும் கடுகு பயிரிடப்படுகிறது. இவ்வாறாக நாடு முழுவதும் 60.36 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு 80 லட்சம் டன் கடுகு அறுவடையாகி வருகிறது.

பெரும்பாலும் எண்ணெய் பிழியும் 7000 முதல் 9000 வரையிலான தொழில் கூடங்களில்தான் எண்ணெய் உற்பத்தி நடக்கிறது. நவீன தொழிற்சாலையில் மிகக்குறைந்த அளவிலான உற்பத்தி தான். கடுகு எண்ணெயின் புண்ணாக்கு கால்நடைத்தீவனம். இலைகள் மக்களின் கீரை உணவு. இயல்பில் அதிகக் காரநெடியும்.

பிசுக்குத் (பிசு பிசுப்பு) தன்மையும் கொண்ட கடுகு எண்ணெய், இதய நோய்க்கு காரணமான கரையாது உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் வேதியியல் திறன் கொண்டது.

சதியில் எண்ணெய் இறக்குமதி:

நமது நாட்டின் சமையல் எண்ணெயின் ஒரு வருடத்தேவை சுமார் 217 லட்சம் டன். இதில் உள்நாட்டு உற்பத்தி 89&78 லட்சம் டன். மீதி 127.31 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது உள்நாட்டின் 68 சதவீத எண்ணெய் தேவைக்கு அந்நிய நாடுகளை நம்பியுள்ள அவலமான எதிர்பார்ப்பு நிலைக்கு இந்தியா நகர்த்தப்பட்டுள்ளது.

மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிராக change.org என்ற வலைத்தளத்தில் மக்கள் கையெழுத்திட்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

விவசாயம் இப்போதும் மாநிலப் பட்டியலில் தான் இருக்கிறது. தன் மாநிலத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் உரிமை மாநில அரசுக்கு எப்போதும் உள்ளது. எனவே கடுகுப் பிரச்சனை நமக்கானதல்ல என மாநில அரசும் மக்களும் இருக்க வேண்டாம். மரபணு மாற்றுப்பயிர்கள் எல்லோருக்குமான எதிர்காலச் சீர்கேடு என்பதை உணர்ந்து எழ வேண்டும்.

கிராமத்தான்