அரவிந்த் கெஜ்ரிவால் மாட்டிக் கொள்வார். இந்த அரவிந்த் கெஜ்ரிவால் அண்ணா ஹசாரே மற்றும் பலருடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடியது நாடகமே. அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள் என்று கூக்குரலிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் துவக்கி, அரசியல்வாதியானார். இது முதல் கோணல். ஊழல் செய்ததற்க்காக எந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்தாரோ அதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து தனது முதல்வராகும் ஆசையைத் தணித்து கொண்டார்.

"முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உட்பட பலர் காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்ததனால் கைது செய்யப்படுவார்கள் என்று தேர்தலின்போது, கொக்கரித்தார். காங்கிரஸ் தயவில் தமக்கு முதல்வர் பதவி கிட்டியவுடன், காமம் வெல்த் விளையாட்டில் ஊழல் நடந்ததற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று மறுதலித்தார்.

தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தனக்கு அரசு பங்களா தேவையில்லை, அது மக்கள் பணம் என்றார். பின் பதவியேற்றவுடன், ஐந்து படுக்கையறைகளைக் கொண்ட ஒரு ட்யூப்ளக்ஸ் பங்களா போதாது என்று இரண்டு பெற்றுக் கொண்டு வசித்து வருகிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நானோ எனது அமைச்சர்களே அரசு கார்களை உபயோகிக்க மாட்டோம் என்று சொன்ன கெஜ்ரிவாலின் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போதிலிருந்தே அரசு கார்களில் வளம் வரத் துவங்கியிருந்தனர்.

பின்னர் இன்னும் ஒரு படி மேலே போய் அரசின் பாதுகாப்பு வளையத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஏனெனில் நான் மக்கள் வரிப்பணம் வீணாவதை விரும்பவில்லை என்றார். ஆனால் முதல்வர் ஆனது முதல் இன்றுவரை மூன்றாண்டுக்கு பாதுகாப்பு வளையத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி துவக்கப்படுவதற்கு முன் வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் மை வீசியதாக நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி துவக்கப்பட்ட பின் தான் மை வீசி , ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டனர். இதை விளம்பரத்திற்காக இவர்களே செய்கிறார்கள் என முணுமுணுப்பு பல இடத்திலிருந்து ஒலிக்க ஆரம்பித்தவுடன் இது நின்றுவிட்டது. சந்தேகம் ஊர்ஜிதமாகியது.

இதைவிட கேஜ்ரிவாலிடம் கண்டிக்கத்தக்க விஷயம் இவரும் இவரின் கட்சிக்காரர்களும் தீவிரவாதிகளுக்கும் ஆதரவாகவும் தேசியவாதிகளுக்கு எதிராகவும் குரலெழுப்புவது தான்.

கட்சியில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தாததன் விளைவு அவர் கட்சி துவங்கும்போது உடனிருந்த கட்சிப் பொறுப்பாளர்களில் அதிகம் பேர் இவரை விட்டு விலகி விட்டனர். இப்போது இவரோடு சட்டசபையில் இருப்பவர்களில் பலர், போலிச் சான்றிதழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஊழல் குற்றசாட்டுகள், கற்பழிப்பு குற்றசாட்டுகள், போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். ஆட்சியில் கவனம் செலுத்தாததால் தலைமைச் செயலாளரே ஊழல் குற்றச்சாட்டால் நீக்கப்படுகிறார். கெஜ்ரிவால் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார்.