மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, சிறுபான்மையினரை குஷிப்படுத்தினால் போதும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார். அவர் எல்லோருக்குமான தலைவர் என்பதை மறந்து விட்டனர்.
அவரின் மேல் பல ஊழல் கறைகள் படிந்துள்ளன.
ஊழல் என்ற கோணத்தை கூட மக்கள் மன்னித்து விடலாம். ஆனால் மேற்கு வங்கத்தில் இந்துக்கள் மேல் நடக்கும் வன்முறைகளை முதலமைச்சரான மம்தா கண்டுக் கொள்வதே இல்லை.
தீவிரவாதத்தினால் கொடுமைகள் அதிகமாகி கொண்டு வந்தாலும், காவல் துறை கண்டுக் கொள்வதில்லை.
அமெரிக்கா வரை
மேற்கு வங்கத்தில் இந்து சமயத்தை சேர்ந்து சிறு பெண்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது வேதனை. பங்களாதேச தீவீரவாதிகளின் ஊடுருவல் அதிகமாகியது மம்தாவின் காலத்தில் தான். அவர்களின் வன்முறைகளை மம்தா தட்டிக் கேட்காததால், மேற்கு வங்கம் இன்னொரு காஷ்மீராகி கொண்டு வருகிறது. பத்திரிகைகாரர்கள் கேள்விகள் கேட்டால் கூட மம்தாவின் கோப கத்தல் பிரபலம்!!
இந்த பெண்களை யார் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று காவல் துறை அறிந்தாலும் கண்டுக் கொள்வதில்லை. கடந்த வருடம் மம்தா அமெரிக்கா சென்ற போது, அங்கிருந்த மக்கள் இவருக்கு கறுப்பு கொடி காட்டி, ‘‘எங்கே எங்கள் பெண்கள்’’ என்று கோஷம் போட்டனர்.
துலஹர் கோரம்
கடந்த மாதம் துல்ஹர் கிராமத்தில் சுமார் 200 இந்து வீடுகளை கொளுத்தி, தரை மட்டமாக்கினர் தீவீரவாதிகள். மம்தாவை பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, அவர் இப்படி கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கோபமாக கத்தினார். இங்கு எந்த கலவரமும் இல்லை என்றும் கூறினார்.
நான் இருக்கிறேன்
உங்கள் தலைவர் என நான் மட்டும் தான் இருக்கிறேன் என்ற கர்வத்தில் மம்தா திளைத்திருக்க, 2008ம் ஆண்டு ‘‘இந்து சமிதி’’ என்ற இந்து பாதுகாப்பு அமைப்பு பிப்ரவரி 14ந் தேதி கல்கத்தாவில் சிறிதாக தொடங்கியது. பிப்ரவரி 14ல் தான் தன்னலமற்ற தேச தொண்டர் பகத்சிங், தூக்கிலிடப்பட்ட நாள் என்பதே இந்த நாளின் சிறப்பு.
நம்மை மீறி என்ன செய்ய முடியும் இவர்களால் என்றே இறுமாப்புடன் இருந்தனர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் எடுபிடிகள்.
ஆனால் 2017ம் ஆண்டு பிப் 14ந் தேதி கல்கத்தா நகரில் சுமார் 1 லட்சம் இந்துக்கள் 10ம் ஆண்டு விழாவை கொண்டாட, தன்னிச்சையாக குவிய தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல எளிய மக்கள் வரிசையாக வந்து கொண்டே இருந்தனர்.
ரௌடிகளின் அட்டகாசம்
பஸ், டிரக், சைக்கிள் என பல்வேறு வகையில் மக்கள் வந்த வண்ணம் இருக்க, அரசியல் குண்டர்கள் இந்த இந்து மக்களை தாக்கினர்.
பற்றி எரியும் மேற்கு வங்கம்!

உடைந்து கட்டுப் போட்ட கைகள், மற்றும் தலையோடு பல நூறு பேர்கள் கலந்து கொண்டது, அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பன் கோஷ்
இந்து சமதியின் நிறுவனர் தப்பன் கோஷ், தனது எழுச்சி உரையில், இது நமது நாடு! நமது மதம், இனி நாம் பின்வாங்க கூடாது. எதிர்த்து நிற்போம். எதற்கும் தயங்க கூடாது. இந்துக்கள் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நமது மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார். பிற மதத்தினர் அவரை தெய்வமாக பார்ப்பதாகவே நம்புகிறார். அவரது கனவு கலைவது நிச்சயம். ஆனால் அதற்குள் நமது மாநிலம் அழிந்து விடும். எனவே நாம் தர்ம போரை துவங்க வேண்டும் என்றார்.
மேற்கு வங்கம் இன்னும் ஒரு காஷ்மீராக மாறி விட கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று ‘பனு£ன் காஷ்மீர்’ இயக்கத் தலைவர் அஜய் சுருங்கோ எச்சரித்தார்.
அமெரிக்கா பிழைத்தது
2011ம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு உடனே அமெரிக்கர்கள் டிரம்ப் போன்ற உறுதியான தலைவரை தேர்தெடுத்திருக்க வேண்டும். கடைசி யிலாவது கடவுள் அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து, டிரம்பை அதிபராக்கி விட்டர். இனி அமெரிக்கா வளமாக வாழும். அதைப் போல நாமும் ஒற்றுமையாக இருந்து நமது அரசியலை அரங்கேற்றுவோம் என்று சூளுரைத்தார்.
கூடியிருந்த லட்சம் மக்களும் உற்சாகமாக கரவொலி செய்து வரவேற்றனர். நிச்சயம் மம்தா பானர்ஜி சிந்திக்க வேண்டும்.