விரைவில் வர இருக்கிறது அருணாப் கோஸ்வாமியின் ' ரிபப்ளிக் டிவி'. தனது வலதுசாரி ஆதரவினால் இதர ஊடகங்களாலும் பலிக்கப்பட்டு, தான் பணியாற்றிய டைம்ஸ் நவ் ஊடகத்தின் உரிமையாளர்களால் அவமானப் படுத்தப்பட்ட அருணாப், விரைவில் தனது ரிபப்ளிக் டிவியை கொண்டுவர இருக்கிறார். தனது டிவி பற்றிய சில கேள்விகளுக்கு அவர் Reddit என்ற கேள்வி-பதில், வெளியிடும் வலைத்தளத்திற்கு அளித்த பதில் இடதுசாரி ஊடகங்களுக்கு மத்தியில் நல்லதொரு தேசிய ஊடகம் ஒன்று மலரும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது. அவரது பதில்களில் சில இதோ:

உங்கள் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட முதலீடு செய்துள்ள ராஜீவ்சந்திரசேகர் ( முன்னாள் BPL நிறுவன அதிபர்) பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் எனும்போது உங்கள் டிவி நடுநிலையை கடைப்பிடிக்குமா என்ற கேள்விக்கு " அவர் ஒரு சிறந்த தேசியவாதி, நானும் அவரும் பல விஷயங்களில் ஒன்றுபடுகிறோம்" என்று நேர்மறையாக பதில் தெரிவித்துள்ளார்.

உங்களின் கொள்கை கோட்பாடுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு...

ஒவ்வொரு இந்தியரும் இந்தியப் பற்றாளராக, இந்திய ராணுவத்தின் மீது மதிப்பு கொண்டவராக இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் வலதுசாரி என்றால் என் தொலைக்காட்சி வலதுசாரிதான் என்று நறுக் பதில் கொடுத்துள்ளார்.

காஷ்மீர் பற்றிய கேள்வி ஒன்றிற்கு, இந்திய ராணுவமும் துணை ராணுவமும் இன்னமும் அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வீரர்கள் பலியாவதை தடுப்பதற்காக ராணுவம் ஒரு பயங்கரவாதியை தனது ஜீப்பின் முன்னால் கட்டிவைத்து கல்லெறியைத் தடுத்தது என்றால் அந்த செயலில் தவறு ஏதும் காண முடியாது என்று கூறியுள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் பற்றிய கேள்விக்கு, இந்திய ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்வி கேட்காத வரைதான் பத்திரிகை சுதந்திரம் என்றும் கூறியுள்ளார்.

முத்தாய்ப்பான கேள்வியாக, நீங்கள் நேர்காணல் செய்த தலைவர்களில் தாங்கள் ரசித்தது யாரை என்ற கேள்விக்கு ராகுல் காந்தி என பதில் அளித்துள்ளார்.

ஸ்வராஜ்யா ஆங்கில மாத இதழின் வலைதளப்பதிப்பில் தெளிவற்ற ஊடகங்களுக்கு மத்தியில் தெளிவான ஒரு ஊடகம் வர இருக்கிறது என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.

காஷ்மீர் பற்றியும் ராணுவம் பற்றியும் அருணாப்பின் பதில்கள் தெளிவாக இருப்பது மகிழ்ச்சியே. ஆனால் நம் சராசரி இந்தியர்கள் ராணுவத்தைப் பார்க்கும் பார்வை சரிதானா? இது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து பிரபல ராணுவ வீரர் ஆர்.எஸ்.என் சிங், ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதில் பிரிட்டனின் மன்னர் குடும்பத்து ஆண் வாரிசுகள் ராணுவத்தில் பணியாற்றி இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அமெரிக்காவில் ஒருவரது ராணுவ பின்புலம் என்பது அரசியலில் அவருக்கு மதிப்பை கூட்டும் விஷயம். இதியாவில்தான் நமது அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் தங்கள் வாரிசுகள் ராணுவத்தில் சேருவதை தடுக்கிறார்கள் என்பதோடு மருமகன்களைக் கூட தடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஒரு நல்ல செய்தி:

நமது ராணுவத்தைப் பற்றி இனி யாரவது பொய் பேசி இழித்தும் பழித்தும் பேசினால் கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யலாம். கீழ்கண்ட மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பலாம் webmaster.indianarmy.nic.in , இந்தியன் ஆர்மி ஏ.டி.ஜி.பி அவர்களுக்கு 011-23019744 அல்லது 23333066 என்ற எண்ணில் போன் பேசி புகார் அளிக்கலாம் அல்லது http://twitter.com/adgpi என்ற முகவரிக்கு டிவிட் செய்யலாம்.