இன்னும் சில தினங்களில் சசிகலா தமிழக முதல்வர் ஆகப்போகிறார் எனப் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நேரத்தில், ஜெயலலிதாவின் சமாதியில் தமிழக முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சசிகலா தரப்பு தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னதாகவும். "தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் விருப்பப்பட்டால் ராஜினாமாவை திரும்பப்பெறுவேன்." என்றும் கூறினார். மேலும் தனது அமைச்சர்களே சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என கூறியது தன்னை மிகவும் வேதனைக்காளாகியது என்றார்த் திரு.ஓ.பன்னீர்செல்வம்.

இனி தமிழக அரசியல் காலத்தில் நடக்கவிருப்பது என்ன?

4102A.jpg 44.93 KB  • ஆளுநர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரலாம்.
  • திரு.ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜிநாமாவை திரும்பப்பெற்றால் மீண்டும் முதல்வராகலாம்.
  • கட்சித்தாவலுக்கு எதிராக அமலில் உள்ள சட்டத்தால் கட்சி இரண்டாகப் பிரிய வாய்ப்பில்லை. இந்தச் சூழ்நிலையில் பெரும்பான்மை MLA -க்களின் ஆதரவைக்க கொண்ட நபர் ஆட்சியைக் கைப்பற்றலாம்.
சசிகலா தரப்பு கூறுவது என்ன?

4102B.jpg 53.35 KB

செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா அவர்கள் "134 MLA -க்களும் ஒரே குடும்பம், எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை." எனக் கூறிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விரைவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவார் என்றும் கூறினார். இதையே நாடாளுமன்ற துணைத் தலைவர் திரு. தம்பிதுரை அவர்களும் வழிமொழிந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச். ராஜா போன்ற தலைவராகள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பெருகிவரும் ஆதரவு, மத்திய அரசின் ஆதரவு நிலைப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தல் நாளைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் பெரும்பான்மை MLA -க்கள் சந்திக்கக்கூடும்.