2000 -களில் சன், கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளின் நடுவே, விஜய், ராஜ் போன்ற டிவி சேனல்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருந்தது. அதில் ராஜ் குழுமத்தின் சேனல்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளராகவும், விளம்பர முகவராகவும் இருந்த கலைக்கோட்டுதயம் அப்போது மக்களால் நிறைய தெரிந்தவரில்லை. (அதாவது குறைந்த பட்ச ' ராஜ் டிவியின் சாகுல் அமீது அளவிற்கு கூட ) ..

ராஜ் டிவி மீது கொண்ட சில பிணக்குகள் காரனமாக பின் வெளியேறினார் கலைக்கோட்டுதயம். அதற்கு பின் , அவரைப் பற்றிய செய்திகள் ( என்னைப் போன்ற ஊடகவியலாளர்கள் மத்தியில்) ஏதும் சில ஆண்டுகள் வரை இல்லை.

பின் திடீரென, 2003 இல், அவர் ( கலைக்கோட்டுதயம்) தனி தொலைக்காட்சி சேனலை தொடங்கி யிருப்பதாக , கேள்விப்பட்டு அதிசயப்பட்டோம். காரணம் ஒரு சினிமாக் கம்பெனியை கூட எளிதில் நாம் தொடங்கி விடாலாம். ஆனால், , டிவி சேனல் தொடங்குவது என்பது ' யானை கட்டி பராமரிப்பது போல், ஒளிபரப்பு உரிமம், வாடகை, படப்பிடிப்பு கருவிகள், செய்தி ஆக்கம் , ஆட்கள் , சம்பளம் , கட்டணம் என டிவி சேனல் களமே வேறு. தவிர, டிவி நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் என்கிற தளம் அரசியலுக்கு நெருக்கமா னது தானே!.

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு எளிமையான ஆள்,சேனல்களில் உயர் பொறுப்புக்கே வர முடியாது என்ற போது, சேனல் உரிமையாளர் என்றால்,?

2004 மத்தியில் தமிழன் டிவி கோயம்பேட்டில், ஒரு டபுள் பெட் ரூம் ஃப்ளாட் ஒன்றில் இயங்கிக்கொண்டிருந்தது. தொழில் நிமித்தம் அவரைப் பார்க்க போயிருந்த போது, அறுந்துப் போயிருந்த வீடியோ டேப்பினை பிரித்துக் கொண்டிருந்தார். ( ஃபிளாட்டின் , கிச்சன் அறைதான் வீடியோக்களின் ஸ்டோர் அறை)

உலகெலாம் ஒலிக்ககூடிய ஒளிபரப்பாகக் கூடிய தமிழர் சிந்தனைகள் அந்த சமையலைறையில் தான் ஏதோ ஒரு அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தன.

" நேரத்தை நிரப்பும்,அளவிற்கு எப்படி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியும்? தயாரிப்புச் செலவு அதிகமாகுமே? '' என்றபோது,

" சீமானின் பேச்சு ஒளி நாடாக்கள் தான் அதைச் செய்கின்றன" என வெளிப்படையாகவே சொல்லி பெருமிதப்பட்டார்.

" அதிகம் போனால் இன்னும் ஒரு வருஷம் இவர் தாக்குப் பிடிச்சா கஷ்டம்" வெளியில் வந்த போது , நண்பர் சொன்னார்.

14 ஆண்டுகள் ஆகி விட்டன, தமிழ் நாட்டின் நம்பர் ஒன் சேனலாக தமிழன் டிவி வந்து விட்டதா? என்றால் , 14 ஆண்டுகளாக தமிழன் டிவி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதுவே கலைக்கோட்டுதயத்தின் ஒருமித்த வெற்றி.

குத்தாட்டம், ரியாலிட்டி ஷோ, சூப்பர் சிங்கர் ,சூப்பர் ஜோடி என்றெல்லாம் மலிவு வியாபரத்தில் சிக்குண்டாமல், பண முதலைகளின் நடுவே சிறுமீனாக ஒரு தனிப்பாதையில் நீந்தி கொண்டு, இன்னும் தமிழர்களின் ரசனைகளின் விதிவிலக்காக தமிழன் டிவி நீடித்துக் கொண்டிருக்கிறது.

சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர், பொது நலவாதி, வணிக நோக்கு அற்ற வேடிக்கையான வியாபாரி, சாந்த குணம் கொண்டவர், நூல்கள் வாசிப்பவர்

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வியல் மேம்பாடு பற்றி அக்கறை கொண்டவர் கலைக்கோட்டுதயம்..

இவரைத்தான் நாம் தமிழர் கட்சி ஆர்.கே நகரின் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.

ஒரு விஐபி தொகுதியில் நிற்கக்கூடிய அளவிற்கு, மக்கள் முற்றிலும் அறிந்த , செல்வாக்கு பெற்ற விஐபி யாக கலைக்கோட்டுதயம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், மற்ற விஐபி வேட்பாளர்களுக்கு இல்லாத ஒரு பெரும்தகுதி கலைக்கோட்டுதயத்திற்கு உண்டு.

எல்லா விஐபி வேட்பாளர்களும் தங்கள் இருப்பையும், எதிர்காலத்தையும் தக்க வைத்துக் கொள்ளத்தான்

இந்த தேர்தலில் போராடுகிறார்கள் .

கலைக்கோட்டுதயமோ தமிழர்களின் எதிர்காலத்தை, இருப்பு வைக்கும் முயற்சியில் களத்தில் நிற்கிறார்.

தமிழனின் விழிப்புணர்வை இந்த தேர்தலில் இருந்து தொடங்குவதற்கு தானொரு ஆரம்பமாக இருக்க போராடுகிறார்.

இந்த தேர்தலில் ஒரு வேளை கலைக்கோட்டுதயம் வென்றால், அது தான் தமிழ் நாட்டுக்கு அரசியல் எழுச்சிக்கு அச்சாரம்.

அறிவு, எதிர்கால சிந்தனை, பொது நல அக்கறை கொண்டோர் ஆர்.கே. நகரில்ஒ ரு சிறிதளவே இருந்தாலும் , அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்று தான்.

மறுபடியும் அதே தவறைதான் செய்யப் போகிறீர்களா?

- பா.சுப்ரமண்யம்